Wednesday, December 10, 2008

483. ரியல் எஸ்டேட் பகற்கொள்ளை ஒய்ந்து வருகிறது!

மாதச் சம்பளக்காரர்கள் இருக்கிறார்கள், அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள், அவர்களும் இந்த நாட்டு மனிதர்கள்தான் என்று இப்போதுதான் இந்த ரீ(ய)ல் எஸ்டேட் நிறுவனங்களுக்குத் தெரிய வந்திருக்கிறதாம். அவர்களுக்குத் தேவையான பட்ஜெட் வீடுகளை ரூ. 20 லட்சத்துக்குள் கட்டிக்கொடுத்து லாபம் பார்க்க முடியுமா என்று யோசிக்கிறார்களாம். என்ன ஒரு ஹிப்பக்கிரசி!

மத்தியமர்களை ஃப்ளாட், வீடு என்றாலே காத தூரம் ஓட வைத்த புண்ணியவான்களுக்கு இப்போது கும்பி காயும்போது, ஞானம் பிறக்கிறது போலிருக்கிறது.மேலும் அரசுத் துறைகள் நகரங்களுக்குள் பல நல்ல இடங்களை வீணாகப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறன என்று இந்த ரியல் எஸ்டேட் பகற்கொள்ளைக் கூட்டத்திடமிருந்து குற்றச்சாட்டு வேறு! ஏற்கனவே இவர்களெல்லாம் ஒவ்வொரு ஏரியையும் துர்த்து, புறம்போக்கு நிலங்களை எல்லாம் அபகரித்து, பூங்காக்களை எல்லாம் இடித்து நிரவி, கொள்ளை அடித்தது போதாதா?

குடியிருக்க வீடு என்பது ஓர் அடிப்படைத் தேவை, சந்தேகமில்லை. ஆனால், திடீரென்று அது தான் ஒரே தேவை என்பதுபோல் ஓவர் பில்டப் கொடுத்து, அந்தத்துறை விழுந்தால், பொருளாதாரமே காலி என்று இந்தியாவில் பேசுவது மிகவும் பைத்தியக்காரத்தனம். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், தேவையில்லாமல் மத்திய அரசின் மேல் அழுத்தம் கொடுக்கிறார்கள். அரசை ஏன் கேட்கறீர்கள்? நீங்கள் கொள்ளை அடிக்க இடம் பிடிக்க அலைந்தீர்கள்! உங்களால்,

எந்த மத்தியமர் அல்லது சாதாரண மாதச்சம்பளக்காரன் பயன் அடைந்தான்? இன்றைக்கு கும்பி காய்கிறது என்றால் அதையும் அனுபவியுங்கள். ஏற்கனவே திண்டாடிக்கொண்டிருக்கும் அரசை எதற்கு இன்னும் டார்ச்சர் செய்கிறார்களோ?

வங்கிகளின் வீட்டுக்கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டுமாம். மக்கள் லோன் போட்டு இவர்களிடம் (ஊருக்கு பல மைல் அப்பால்) ஃபிளாட் வாங்கி இவர்கள் மீண்டும் கொள்ளை லாபம் பெற உதவ வேண்டுமாம்! அதற்கு, ஒரு சின்ன வாடகை வீட்டிலேயே ஊருக்குள் இருந்து கொள்வது மேல். தற்போது ஏற்பட்டிருக்கும் 10-15% ரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி என்பது குறைவே! இன்னும் 20% குறைய வேண்டும். ஏனெனில், அந்த அளவுக்கு ஃபிளாட் விலை விஷம் போல் (செயற்கையாக) ஏற்றப்பட்டிருக்கிறது, கடந்த 2-3 வருடங்களில்!

மெல்ல மெல்ல வீட்டுக் கடன் வட்டியை நிச்சயம் 8 சதவிகிதத்திற்குள் கொண்டு வ்ர வேண்டும். அது போல, அடிக்கடி அதை மாற்றாமல் இருத்தல் நலம். ஆனால் இதெல்லாம், ரியல் எஸ்டேட் முதலாளிகள் வீடு/ஃபிளாட்களின் விலையை "நார்மல்" லெவலுக்கு கொண்டு வந்த பிறகு செய்யலாம்.

உண்மையில் இன்று இவர்கள் லக்சுரி அப்பார்ட்மெண்ட் என்று சொல்லிக் கொண்டு 80 லட்சத்தில் இருந்து 1 கோடி வரை வைத்து விற்கும் வீடுகளையே 40 லட்சத்திற்கு தாராளமாக விற்கலாம் அவ்வளவு லாபம் இதில் இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் அரசு தரப்பிலிருந்து காசு கொடுக்கக் கூடாது. இவர்கள் 20 லட்சத்தில் ஃபிளாட் கட்டிக் கொடுத்தால் கூட, இன்றிருக்கும் நிலையில் நிறைய பேர் வீடு வாங்க முன் வர மாட்டார்கள்.

இவர்கள் 80 லட்சத்திற்குக் கட்டிக் கொடுக்கும் வீடே கண்றாவியாக இருக்கும் பொழுது 20 லட்சத்தில் எந்த லட்சணத்தில் கட்டிக் கொடுப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். இப்பொழுதைக்கு கட்ட ஆரம்பிக்கப் போகும் வீடுகளுக்குக் காசு முதல் போட்டால் அந்த அட்வான்ஸ் திருமபக் கிடைப்பது சிரமம் தான். கட்டி முடித்த வீடுகளை மட்டுமே வாங்க வேண்டும், அது கூட இடத்தைப் பொருத்து. சதுர அடி ரேட் ரூ1750 முதல் ரூ4000 க்குள் இருந்தால் மட்டுமே, வாங்குவது உசிதம்.

எ.அ.பாலா

10 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test Comment!

Muthu said...

பாலா,

இந்த பதிவு அதிர்ச்சி அளிக்கிறது.

15 சதவீதம் குறைந்துவிட்டதாகவும் இன்னும் 20 சதவீதம் குறையவேண்டும் என்று கூறியுள்ளீர்களே..அதைத்தான் கூறுகிறேன்.

ஏறும்போது 500 சதவீதம்.குறையும்போது முப்பத்தைந்து சதவீதமா? என்னங்க இது?

குறைந்தபட்சம் பாதிக்கும் கீழாக வந்தால்தான் ஒரு நியாயமான இறக்கமாக இருக்கும் இது.

வடுவூர் குமார் said...

படிக்க சந்தோஷமாக இருந்தாலும் நிஜத்தில் நடக்காது என்றே தோன்றுகிறது.
சற்று முன் ஒரு நண்பன் கூப்பிட்டு வடக்கு சென்னை பக்கத்தில் ஒரு வீடு இருக்கு அதுவும் அது காஸ்ட் அட் ரேட்டில் கொடுப்பதாக சொன்னதும் இப்பதிவை படிக்கும் போது ஞாபகத்துக்கு வந்தது.

சங்கரராம் said...

நல்லா சொன்னிங்க போங்க

ஜயராமன் said...

மிகவும் எரிச்சலில் இதை எழுதியிருக்கிறீர்கள். ஏதேனும் பர்ஸனல் கோபம் இருக்குமோ!!

கொள்ளை அடிக்கிறார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். எத்தனை ரியல் எஸ்டேட் கம்பனி கணக்குகளில் அதீத லாபம் இருக்கிறது ஐயா? எத்தனை ரியல் எஸ்டேட் கம்பனிகள் திவாலாகும் நிலையில் இன்று இருக்கிறது என்பதை அறிவீர்களா?

நடுத்தர பட்ஜட் வீட்டில் நஷ்டம் அல்லது மிகக் குறைவான லாபம். அதே இடத்தில் சொகுசு பிளாட் கட்டினால் நல்ல லாபம் - என்றிருந்தால் தாராள பொருளாதாரத்தில் அவர்கள் எதை தேர்ந்தெடுப்பார்கள் ஐயா? இதில் அவர்களுக்கு சாபம் கொடுப்பானேன். இம்மாதிரி அதிக லாபத்துக்கு இயங்குவது எல்லா துறையிலும் நடப்பதுதானே, அதில் என்ன குறை கண்டோம். அவர்கள் உதவி மனப்பான்மையோடு விட்டுக்கொடுத்து நஷ்டப்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரியா?

இன்று மும்பை முதலான நகரங்களில் என்ன கட்டுமான வசதி இருக்கிறது? நம் நகரங்கள் குப்பைக்கூளங்களாகவும், ஆப்பிரிக்க தேச நகரங்களை விட மட்டமாகவும், சுகாதாரக்கேடு மலிந்ததாகவும் இருப்பினும் நிலத்தின் விலை வளர்ந்த மேலை நாடுகளை ஒத்து இருக்கிறதே, அது ஏன் என்று யோசித்தீர்களா? ப்ளாட்டின் விலையில் 80 சதம் நிலத்தின் விலை. லண்டன் விலைக்கு மும்பையில் ஒரு மூத்திரச்சந்தில் விலை இருப்பதின் காரணம் என்ன ஐயா? அதற்கு ப்ளாட் கட்டுபவர்களா காரணம்? யோசியுங்கள் ஐயா.

கடந்த வருஷம் நிதியமைச்சர் ப்ளாட்டுகளுக்கு சேவை வரியை விதித்தார். இதுதானா நடுத்தர மக்களுக்கு ப்ளாட் எளிதாக்குவதன் லட்சணம். பிரச்சனை எங்கோ இருக்க ப்ளாட் கட்டுபவர்களுக்கு ஏன் சாபம்?

நன்றி

ஜயராமன்

enRenRum-anbudan.BALA said...

ஜயராமன்,
//கொள்ளை அடிக்கிறார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். எத்தனை ரியல் எஸ்டேட் கம்பனி
கணக்குகளில் அதீத லாபம் இருக்கிறது ஐயா? எத்தனை ரியல் எஸ்டேட் கம்பனிகள் திவாலாகும்
நிலையில் இன்று இருக்கிறது என்பதை அறிவீர்களா?
//
இவ்வளவு நல்லவராகவும் அப்பாவியாகவும் இருக்காதீர்கள்! ரியல் எஸ்டேட் பிஸினஸில் கொள்ளை லாபம் என்பது என் ஒருவனது கருத்து மட்டுமல்ல, நீங்கள் இப்படி ஆதரவு அளித்து, இவ்வளவு பரிந்து பேசுவதை வைத்துப் பார்த்தால், நீங்கள் இந்த வீழ்ச்சியால் தனிப்பட்ட அளவில் பாதிக்கப்பட்டது போலத் தெரிகிறது !!!

நம்மூரில் கம்பெனி கணக்குகள் எந்த லட்சணத்தில் உள்ளன என்று தெரியாதா என்ன ? Boom time-ல் இவர்கள் லாபம் நிறைய பார்த்தாகி விட்டது. இப்போது EMI எகிறி இருப்பதால் சிரமப்படுபவர்கள், நிறைய லோன் போட்டு ஃபிளாட் வாங்கியவர்கள் தான் :(

//நம் நகரங்கள் குப்பைக்கூளங்களாகவும், ஆப்பிரிக்க தேச நகரங்களை விட மட்டமாகவும், சுகாதாரக்கேடு மலிந்ததாகவும் இருப்பினும் நிலத்தின் விலை வளர்ந்த மேலை நாடுகளை ஒத்து இருக்கிறதே, அது ஏன் என்று யோசித்தீர்களா?
//
நீங்களே யோசித்து இதற்கு ஒரு நல்ல பதில் கொடுங்களேன் ப்ளீஸ்...

//இம்மாதிரி அதிக லாபத்துக்கு இயங்குவது எல்லா துறையிலும் நடப்பதுதானே, அதில் என்ன குறை
கண்டோ ம். அவர்கள் உதவி மனப்பான்மையோடு விட்டுக்கொடுத்து நஷ்டப்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரியா?
//
//ப்ளாட்டின் விலையில் 80 சதம் நிலத்தின் விலை. லண்டன் விலைக்கு மும்பையில் ஒரு மூத்திரச்சந்தில் விலை இருப்பதின் காரணம் என்ன ஐயா?
//
இவர்களை யாரும் சமூக சேவை பண்ணச் சொல்லவில்லை! ஒரு vicious circle உருவாக
இவர்களே பிரதான காரணகர்த்தாக்கள். ரியல் எஸ்டேட்காரர்களுக்குள்ளான போட்டியில் நில விலையை (செயற்கையாக)ஏத்தி விட்டு, நிலச் சொந்தக்காரர்களை பேராசைக்காரர்கள் ஆக்கினார்கள்.

ஃபிளாட் வாங்க desperate ஆக இருந்தவர்கள் விலை கிடுகிடு என்று ஏறியபோதிலும், வங்கிக்கு ஓடி லோனை வாங்கி வந்து இவர்களிடம் கொட்டினார்கள்! கட்டடத்திற்கு தேவையான பொருட்களை விற்பவர்களும் விலையை ஏற்றத் தொடங்கினார்கள்.. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்!

மேலும், பெரும்பாலான ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய அளவில் காபிட்டலை வைத்துக் கொண்டே, நிலச் சொந்தக்காரர் மற்றும் ஃபிளாட் வாங்குபவர்கள் ஆதரவோடு பெரிய பிராஜெக்டை எளிதில் முடித்தார்கள், கட்டடத்தை கட்டி முடிக்க நிறைய டைம் (2-3 வருடங்கள்) எடுத்துக் கொண்டார்கள். ஆனால், லோன் வாங்கியவர்களுக்கு EMI உடனே தொடங்கி விடும். தனிவீடு வாங்க விரும்பியவர்கள் இந்த பில்டர்களோடு போட்டி போட முடியாததால், இவர்கள் கட்டிய ஃபிளாட்டுகளில் ஒதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எந்த விலை கொடுத்தும், எவ்வளவு லோன் வாங்கியும், ஃபிளாட் வாங்கி, இப்போது அவதிப்படும் IT கம்பெனியில் பணி புரிபவர்களும் குற்றவாளிகளே...

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

முத்து,
வாங்க, நீங்க சொல்றதும் சரி தான். 35% என்பது என் ஏரியாவை வைத்து சொல்லி விட்டேன். சில இடங்களில் 50% குறைய வேண்டும் என்பது சரியே.

enRenRum-anbudan.BALA said...

வடுவூர் குமார்,
யாரும் கொஞ்ச நாள் பில்டர்கள் கிட்டப் போகாம இருந்தா ஆட்டோமேடிக்கா விலை வீழ்ச்சி அடைந்து விடும் !

enRenRum-anbudan.BALA said...

சங்கரராம்,
நன்றி.

said...

பாலா,

ஜயராமன் அய்யா உங்க பதில பார்த்து ஓடிட்டாரு போல :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails